/உள்ளூர் செய்திகள்/சேலம்/ விளையாட்டின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி விளையாட்டின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விளையாட்டின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விளையாட்டின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விளையாட்டின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : செப் 01, 2025 02:11 AM
சேலம்:ஆக., 29ல் மறைந்த, ஹாக்கி முன்னாள் வீரர் மேஜர் தயான்சந்த் பிறந்தநாள், தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் காந்தி மைதானத்தில் நேற்று, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'ஒன்று கூடி விளையாடுவோம், ஆரோக்கியமாக வாழ்வோம்' என, உறுதிமொழி எடுத்தனர். தொடர்ந்து, உடற்பயிற்சி, விளையாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.
சிவரஞ்சன் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். அண்ணா பூங்கா, தமிழ் சங்க சாலை வழியே சென்ற பேரணி, மீண்டும், காந்தி மைதானத்தை அடைந்தது. 'சாய்' விளையாட்டு விடுதி உதவி இயக்குனர் விட்டல்(பொ), மாவட்ட தடகள சங்க செயலர் முத்துக்குமார் உள்ளிட்ட பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.