/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு' அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'
அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'
அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'
அண்ணன், தம்பிக்கு நிலத்தகராறு :2 குடும்பத்தில் 7 பேருக்கு 'காப்பு'
ADDED : செப் 01, 2025 02:11 AM
வாழப்பாடி:வாழப்பாடி, எம்.பெருமா
பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65. இவரது தம்பி முனியன், 62. இருவரும் அருகருகே வசிக்கின்றனர். கடந்த, 18ல், இருவர் குடும்பத்தினருக்கு இடையே உள்ள குறுகிய நிலம் தொடர்பாக, வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
தொடர்ந்து இரு வீட்டினரும் தாக்கிக்கொண்டனர். படுகாயம் அடைந்த இரு வீட்டினரையும் அப்பகுதியினர் மீட்டு, வாழப்பாடி அரசு மருத்துவ
மனையில் சேர்த்தனர். இதுகுறித்து சுப்பிரமணி மகன் காளியப்பன் புகார்படி, முனியன், அவரது மகன்கள் முருகன், 35, ரமேஷ், 28, ஆகியோரை, வாழப்பாடி போலீசார் நேற்று கைது செய்தனர்.
அதேபோல் முனியன் புகார்படி, சுப்பிரமணி, அவரது மகன்கள் காளியப்பன், 39, பிரகாஷ், 37, காளியப்பன் மனைவி தீபா, 33, ஆகியோரை கைது செய்தனர்.