/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மகளிர் உரிமைத்தொகைக்கு 87,212 பேர் விண்ணப்பம் மகளிர் உரிமைத்தொகைக்கு 87,212 பேர் விண்ணப்பம்
மகளிர் உரிமைத்தொகைக்கு 87,212 பேர் விண்ணப்பம்
மகளிர் உரிமைத்தொகைக்கு 87,212 பேர் விண்ணப்பம்
மகளிர் உரிமைத்தொகைக்கு 87,212 பேர் விண்ணப்பம்
ADDED : செப் 01, 2025 02:11 AM
சேலம்;சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:தமிழக அரசு சார்பில், சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், நகர்புறங்களில், 168, ஊரக பகுதிகளில், 264 என, 432 முகாம்கள், கடந்த ஜூலை, 15ல் தொடங்கி, நவம்பர் வரை நடக்க உள்ளது.
இதுவரை, 168 முகாம் நடத்தப்பட்டு, பல்வேறு துறைகள் சார்பில், மக்களிடம் இருந்து, 77,545 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், 23,716 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடக்கிறது. தவிர, இந்த முகாம்களில் மகளிர் உரிமை தொகை கேட்டு, 87,212 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறையினர் கள ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்த முகாம்களில் அளிக்கப்படும் மனுக்களுக்கு, 45 நாட்களில் தீர்வு காணப்படும்.