/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரளி பூ பறிக்கவே கிலோவுக்கு ரூ.50 கூலி ரூ.20க்கு விற்பதால் விவசாயிகள் தவிப்பு அரளி பூ பறிக்கவே கிலோவுக்கு ரூ.50 கூலி ரூ.20க்கு விற்பதால் விவசாயிகள் தவிப்பு
அரளி பூ பறிக்கவே கிலோவுக்கு ரூ.50 கூலி ரூ.20க்கு விற்பதால் விவசாயிகள் தவிப்பு
அரளி பூ பறிக்கவே கிலோவுக்கு ரூ.50 கூலி ரூ.20க்கு விற்பதால் விவசாயிகள் தவிப்பு
அரளி பூ பறிக்கவே கிலோவுக்கு ரூ.50 கூலி ரூ.20க்கு விற்பதால் விவசாயிகள் தவிப்பு
ADDED : ஜூன் 16, 2025 03:54 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் அரளி நடவு செய்யப்பட்டுள்ளது. தினமும் அதிகாலையில் அறுவடை செய்யப்படும், 30 டன் அரளி மொக்கு, தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சில நாட்களாக பெய்த மழையால், அரளி உற்பத்தி அதிகரித்தது. அதேநேரம் தேவை குறைவாக உள்ளதால், விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த, 10, 11ல், கிலோ சாதா, வெள்ளை அரளி தலா, 50 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 100 ரூபாய்க்கு விற்றது. 12ல் சாதா, வெள்ளை தலா, 40; மஞ்சள், செவ்வரளி தலா, 80 ஆக சரிந்தது. 13ல் சாதா, வெள்ளை தலா, 30; மஞ்சள், செவ்வரளி தலா, 80 ரூபாய்க்கு விற்றது. நேற்று முன்தினமும், நேற்றும் சாதா, வெள்ளை தலா, 20 ரூபாய், மஞ்சள், செவ்வரளி தலா, 50 ரூபாயாக சரிந்தது.
பனமரத்துப்பட்டி விவசாயிகள் கூறுகையில், 'கடந்த மாதம் பூ உற்பத்தி குறைவாக இருந்ததால் செடிக்கு உரம் போட்டு, மருந்து அடித்து பராமரித்தோம். தற்போது ஒரே நேரத்தல் பூ உற்பத்தி அதிகரித்துவிட்டது. செடியில் இருந்து பூ பறிக்க கிலோவுக்கு, 50 ரூபாய் கூலி தரவேண்டும். கிலோ, 20 ரூபாயாக சரிந்ததால், 30 ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் பூ பறிக்காமல் விடுகிறோம். ஆடி, 18க்கு பின் உரிய விலை எதிர்பார்க்கலாம்' என்றனர்.