/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1ஏ' தேர்வில் 3,326 பேர் 'ஆப்சென்ட்' டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1ஏ' தேர்வில் 3,326 பேர் 'ஆப்சென்ட்'
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1ஏ' தேர்வில் 3,326 பேர் 'ஆப்சென்ட்'
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1ஏ' தேர்வில் 3,326 பேர் 'ஆப்சென்ட்'
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1, 1ஏ' தேர்வில் 3,326 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : ஜூன் 16, 2025 03:54 AM
சேலம்: டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் - 1, 1ஏ' பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் வட்டத்துக்கு உட்பட்ட, 41 மையங்களில், 55 கூடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. காலை, 8:30 முதல், 9:00 மணி வரை, தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 14,291 பேரில், 10,965 பேர் தேர்வு எழுதினர். இது, 76.72 சதவீதம். 3,326 பேர் வரவில்லை. இது, 23.27 சதவீதம். தேர்வு மையங்களை, 14 நடமாடும் குழுவினரும் கண்காணித்தனர்.
சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தேர்வாணைய விதிமுறைப்படி வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக, கலெக்டர் தெரிவித்தார்.