/உள்ளூர் செய்திகள்/சேலம்/போலீஸ் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய ஆர்ப்பாட்டம்போலீஸ் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய ஆர்ப்பாட்டம்
போலீஸ் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய ஆர்ப்பாட்டம்
போலீஸ் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய ஆர்ப்பாட்டம்
போலீஸ் அதிகாரிகளை 'டிஸ்மிஸ்' செய்ய ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
சேலம் : சேலம் மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
அதில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்; சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, 'டிஸ்மிஸ்' செய்து கைது செய்ய வேண்டும்; சேலம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான போதை புழக்கங்களை ஒழிக்க வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல், செயலர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
ஜனநாயக மாதர் சங்கம்
கள்ளச்சாராய விவகாரத்தை கண்டித்து, பெத்தநாயக்கன்பாளையத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவி துளசி தலைமை வகித்தார். அப்போது கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்தாத மாவட்ட போலீசார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், துணையாக உள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க கோஷம் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் அஞ்சலம், இந்திராணி, பெருமா மார்க்சிஸ்ட் வட்ட செயலர் காளிதாஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.