/உள்ளூர் செய்திகள்/சேலம்/மார்க்கெட் குத்தகைதாரரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைதுமார்க்கெட் குத்தகைதாரரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது
மார்க்கெட் குத்தகைதாரரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது
மார்க்கெட் குத்தகைதாரரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது
மார்க்கெட் குத்தகைதாரரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது
ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
சேலம் : சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சாலையோர வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில், மாநகராட்சி அலுவலகம் முன் சாலை மறியல் நேற்று நடந்தது.
அதில், மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்து பேசியதாவது:வ.உ.சி., மார்க்கெட் சுங்க வசூலை ஒப்பந்தம் எடுத்த குத்தகைதாரர், வியாபாரிகளிடம் கடைகளை விடுவதற்கு, 3 முதல், 10 லட்சம் ரூபாய் வரை பணம் பெறுவதற்கு ரசீது உள்ளிட்ட எதுவும் கொடுப்பதில்லை. இது சட்டப்படி குற்றம். குத்தகைதாரர், புது கட்டடங்களை விலைபேசி விற்பதை தடுக்க வேண்டும். இவருக்கு ஆதரவாக செயல்படும் மாநகராட்சி கமிஷனர், அம்மாபேட்டை மண்டல கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 80 ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகளை ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட தலைவர் பரமவசிவம், செயலர் நேதாஜி உள்பட பலர் பங்கேற்றனர். ஆனால் மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட, 63 பேரை, டவுன் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.