/உள்ளூர் செய்திகள்/சேலம்/பைக்கில் சாராயம் விற்பனை; வீடியோவால் சிக்கிய வியாபாரிபைக்கில் சாராயம் விற்பனை; வீடியோவால் சிக்கிய வியாபாரி
பைக்கில் சாராயம் விற்பனை; வீடியோவால் சிக்கிய வியாபாரி
பைக்கில் சாராயம் விற்பனை; வீடியோவால் சிக்கிய வியாபாரி
பைக்கில் சாராயம் விற்பனை; வீடியோவால் சிக்கிய வியாபாரி
ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே மணிவிழுந்தானில், ஒருவர் பைக்கில் சாக்கு மூட்டையை வைத்துக்கொண்டு பாக்கெட் சாராயம் விற்கும் வீடியோ, வாட்ஸாப் உள்ளிட்டவற்றில் பரவியது.
இதுகுறித்து எஸ்.பி., அலுவலக அறிக்கையில், 'கடந்த ஏப்ரலில் எடுக்கப்பட்ட வீடியோ பரவி வருகிறது. சாராயம் விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்யப்பட்டுள்ளார்' என குறிப்பிடப்பட்டிருந்தது. சிறிது நேரத்தில், அந்த அறிக்கை நீக்கப்பட்டது.
இந்நிலையில் தலைவாசல் போலீசார் விசாரித்து, பைக்கில் சாராயம் விற்ற, மணிவிழுந்தான், ராமசேஷபுரத்தை சேர்ந்த சிவசந்திரன், 36, என்பவரை நேற்று முன்தினம் நள்ளிரவு கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சாராய வியாபாரி சிவசந்திரன் தலைமறைவாக இருந்தார். தற்போது அவரை கைது செய்துள்ளோம்' என்றனர்.