/உள்ளூர் செய்திகள்/சேலம்/பெங்களூரு மருத்துவருக்கு தங்க பதக்கம் வழங்கல்பெங்களூரு மருத்துவருக்கு தங்க பதக்கம் வழங்கல்
பெங்களூரு மருத்துவருக்கு தங்க பதக்கம் வழங்கல்
பெங்களூரு மருத்துவருக்கு தங்க பதக்கம் வழங்கல்
பெங்களூரு மருத்துவருக்கு தங்க பதக்கம் வழங்கல்
ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
சேலம்: சேலத்தில், 'டயாபடீஸ் அசோசியேஷன் ஆப் சேலம்' அமைப்பு சார்பில், சர்க்கரை நோய் குறித்த கலந்தாய்வு மாநாடு நேற்று நடந்தது.
தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். அதில், பெங்களூரை சேர்ந்த மருத்துவர் அனந்த சுரேஷூக்கு, சேலம் மருத்துவர் ஜானகிராமன் பெயரால் வழங்கப்படும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் முறை, சிகிச்சையில் உலக அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நோயாளிகளுக்கு அணிவிக்கப்படும் மருத்துவ காலணி, புது கண்டுபிடிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டன.துணை தலைவர்கள் கந்தசாமி, சதீஷ்குமார், செயலர் கார்த்திகேயன், புரவலர் கிருஷ்ண செட்டி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்பட மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் பங்கேற்றனர்.