ADDED : ஜூன் 24, 2024 07:26 AM
சேலம் : சேலம் மாவட்டம் தாரமங்கலம், துட்டம்பட்டியை சேர்ந்தவர் பூபாலன், 22.
பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவர் ஓராண்டுக்கு முன் மேகலா, 21, என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த, 21ல் குடும்ப தகராறில் பூபாலன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மேகலா, நேற்று முன்தினம், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி, அவரது உறவினர்கள், கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இந்நிலையில் நேற்று காலை பூபாலனும் உயிரிழந்தார். இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.