/உள்ளூர் செய்திகள்/சேலம்/திருமுருகன் திருப்புகழ் சபா பொன் விழா கொண்டாட்டம்திருமுருகன் திருப்புகழ் சபா பொன் விழா கொண்டாட்டம்
திருமுருகன் திருப்புகழ் சபா பொன் விழா கொண்டாட்டம்
திருமுருகன் திருப்புகழ் சபா பொன் விழா கொண்டாட்டம்
திருமுருகன் திருப்புகழ் சபா பொன் விழா கொண்டாட்டம்
ADDED : ஜூன் 24, 2024 07:27 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில் திருமுருகன் திருப்புகழ் சபாவின், 50வது ஆண்டு பொன் விழா, அருணகிரிநாதர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.தலைவர் மோகன் தலைமையில் நாகாயம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அருணகிரிநாதர் படத்தை கையில் ஏந்தி, முருகன் பாடல்களை பாடியபடி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.
வழியில் மக்கள் வரவேற்று வழிபட்டனர்.திருவள்ளுவர் சாலை, மாரியம்மன் கோவில், ஈச்சமரம் பிள்ளையார் கோவில் வழியே பழநி ஆண்டவர் கோவிலை அடைந்தனர். அங்கு திருமுருகன் திருப்புகழ் சபா, கிருஷ்ண சைதன்யா பஜனா மண்டலி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருப்புகழ் சபா சார்பில் திருப்புகழ் பாராயண நிகழ்ச்சி நடந்தது. சபாவின், 50ம் ஆண்டு பொன் விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சிக்கு தேசிய சமூக இலக்கியப்பேரவை மாநில தலைவர் குமரவேலு தலைமை வகித்தார். சபா செயலர் சூரியகலா வரவேற்றார்.தெய்வீக தமிழ் சங்க நிறுவனர் வீரபத்ரானந்தபுரி சுவாமி, பொன் விழா ஆண்டு மலரை வெளியிட, சேலம் தனியார் மருத்துவமனை சேர்மன் பன்னீர்செல்வம், முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.விஷ்ணு ஆலய தலைவர் வேலுச்சாமி, உலக தமிழியக்க மாவட்ட தலைவர் இளங்கோவன், சேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் திருப்புகழ் சபா தலைவர் உதயகுமார், அகில உலக முருக பக்தர் சேவா சங்க கூட்டமைப்பு தலைவர் கோடீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.