/உள்ளூர் செய்திகள்/சேலம்/பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரைபல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை
பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை
பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை
பல தானிய பயிர்களை உரமாக்கும் தொழில்நுட்பத்தை பின்பற்ற அறிவுரை
ADDED : ஜூன் 30, 2024 03:38 AM
பனமரத்துப்பட்டி: பல வகை தானியங்களை விதைத்து உரமாக்கும் தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு
கூறியதாவது:
ஒரு வயலில் ஒரே நேரத்தில், 7க்கும் மேற்பட்ட விதைகளை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழவு செய்வதால் மண் வளம் பெருகும். தானியங்களில், 2 வகை; எண்ணெய் வித்துகளில், 2 வகை; பயறு வகைகளில், 2 வகை; பசுந்தாள் வகை ஒன்று ஆகிய ஒவ்வொன்றும், 1 கிலோ வீதம், 7 கிலோ விதை, ஒரு ஏக்கருக்கு போதும்.
குறிப்பாக எள், சோளம், ஆமணக்கு, தட்டைப்பயிர், அகத்தி, கொள்ளு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை, சூரியகாந்தி, பச்சைப்பயிர், தினை, பனிவரகு, சாமை, மக்காச்சோளம் போன்றவை உகந்தவை. பல வகை பயிர்களை விதைத்து அவற்றை மடக்கி உழவு செய்து, அடுத்த பயிருக்கு உரமாக்குவது சிறந்த தொழில்நுட்பம். இதன்மூலம் மண் வளம் மேம்படுவதோடு, அடுத்த பயிருக்கு தேவையான சத்துகள் எளிதில் கிடைப்பதால் பயிர்கள் வளர்ச்சி அதிகரித்து, கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.