/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பள்ளியில் மரம் கடத்தல்: தலைமை ஆசிரியரிடம் சி.இ.ஓ., விசாரணை பள்ளியில் மரம் கடத்தல்: தலைமை ஆசிரியரிடம் சி.இ.ஓ., விசாரணை
பள்ளியில் மரம் கடத்தல்: தலைமை ஆசிரியரிடம் சி.இ.ஓ., விசாரணை
பள்ளியில் மரம் கடத்தல்: தலைமை ஆசிரியரிடம் சி.இ.ஓ., விசாரணை
பள்ளியில் மரம் கடத்தல்: தலைமை ஆசிரியரிடம் சி.இ.ஓ., விசாரணை
ADDED : ஜூன் 30, 2024 03:38 AM
சேலம்: இடைப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அதில் பள்ளி வளாகத்தில் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆனால் பெற்றோர் ஆசிரியர் கழகம், பொதுப்பணி, வருவாய், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்படாமல், தலைமை ஆசிரியர் பால்ராஜ், மரங்களை வெட்டி, லாரிகளில் ஏற்றி வெளி நபர்களுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து புகார் எழுந்த நிலையில் வருவாய்த்துறை சார்பில் பள்ளியில் விசாரணை நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், அவரது அலுவலகத்துக்கு நேற்று தலைமை ஆசிரியரை வரவழைத்து, மரம் வெட்டியது குறித்து விசாரித்தார். தொடர்ந்து அதன் அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்பினார்.