/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 மொபட்டுகள் பறிமுதல் ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 மொபட்டுகள் பறிமுதல்
ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 மொபட்டுகள் பறிமுதல்
ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 மொபட்டுகள் பறிமுதல்
ஏற்காட்டில் வாடகைக்கு ஓட்டிய 9 மொபட்டுகள் பறிமுதல்
ADDED : ஜூன் 30, 2024 03:37 AM
ஏற்காடு: ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்க்க வசதியாக, உள்ளூரை சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோர், கார், ஆட்டோ, வேன்களை வாடகைக்கு ஓட்டுகின்றனர்.
ஆனால் சிலர், இருசக்கர வாகனங்களை,
வாடகைக்கு விடுவதாக, டாக்ஸி ஓட்டுனர்கள் புகார்படி, போக்குவரத்து துறையினர் வாகன
சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்தனர். இதனால் சில மாதங்களாக இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது குறைந்தது.
இந்நிலையில் நேற்று, சென்னை, பெங்களூரை சேர்ந்த, 18 சுற்றுலா பயணியர், சேலத்தில்,
தனியாருக்கு சொந்தமான, 9 மொபட்டுகளை
வாடகைக்கு எடுத்துக்கொண்டு சுற்றுலா வந்தனர். ஒண்டிக்கடையில் அந்த வாகனகளை, டாக்ஸி டிரைவர் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள், 9 மொபட்டுகளையும்
பறிமுதல் செய்தனர்.