/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தீவிர சிகிச்சை பிரிவு ரூ.20 கோடி ஒதுக்கீடு தீவிர சிகிச்சை பிரிவு ரூ.20 கோடி ஒதுக்கீடு
தீவிர சிகிச்சை பிரிவு ரூ.20 கோடி ஒதுக்கீடு
தீவிர சிகிச்சை பிரிவு ரூ.20 கோடி ஒதுக்கீடு
தீவிர சிகிச்சை பிரிவு ரூ.20 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜூன் 30, 2024 03:39 AM
சேலம்: சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவு(கிரிட்டிக்கல் கேர் பிளாக்) அமைக்க, தேசிய சுகாதார திட்டத்தில், 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தரைத்தளம், 9,630 சதுரடியில் அமைகிறது.
அத்துடன் சேர்ந்து, 6 மாடி கட்டடத்தில், முதல் கட்டமாக, 50 படுக்கை வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு அமைகிறது. இதில் சாய்தள பாதை, அறுவை சிகிச்சை அரங்கம், சிகிச்சைக்கு முன், பின் வார்டு, ஸ்கேன், லிப்ட் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது.
அதற்கான ஒப்பந்தம் ஜூலை, 31ல் விடப்பட்டு கட்டுமானப்பணி விரைவில் தொடங்கும். 540 நாட்களில் பணியை முடித்து தீவிர சிகிச்சை பிரிவு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.