/உள்ளூர் செய்திகள்/சேலம்/புத்த துறவிகள் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதிபுத்த துறவிகள் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதி
புத்த துறவிகள் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதி
புத்த துறவிகள் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதி
புத்த துறவிகள் முன்னிலையில் திருமணம் செய்த தம்பதி
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
தலைவாசல் : தியாகனுார் புத்தர் கோவிலில், துறவிகள் முன்னிலையில் தர்மபுரி வாலிபருக்கு திருமணம் நடந்தது.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே தியாகனுாரில் உள்ள இரண்டு புத்தர் கோவிலில், பத்து ஆண்டுகளாக பவுத்த மதத்தை தழுவியவர்கள், புத்தர் மீது ஈடுபாடு கொண்டவர்கள் திருமணம் செய்து வருகின்றனர்.
அதன்படி, தர்மபுரியை சேர்ந்த சரவணன் என்ற சாக்கியசன்னா, 30, பதிவுத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை வெண்மணி, 27, என்பவரும் நேற்று, தியாகனுார் புத்தர் தியான மண்டபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, புத்த துறவிகள் திருமணம் செய்து வைத்தனர்.தென்னிந்திய பவுத்த கூட்டமைப்பில், புத்த துறவிகள் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும், 29, 30ல், தியாகனுாரில், 30க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம், ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் நடந்தது.இதில் நிர்வாகிகளாக கர்நாடகா பந்தேதம்ம வீரா, காரைக்குடி சாக்கியமுனி, சேலம் புத்தசீலர், மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ராமநாதபுரம் மவுரியபுத்தா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.