/உள்ளூர் செய்திகள்/சேலம்/வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம்வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம்
வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம்
வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம்
வேளாண் விரிவாக்க மையத்தில் ஆன்லைன் பரிவர்த்தனை அறிமுகம்
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
பனமரத்துப்பட்டி : ஆன்லைன் பரிவர்த்தனை மூலம், வேளாண் இடுபொருட்கள் வாங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில், தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கத்தின் மூலம் விதைகள், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாடு காரணிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் ஜிப்சம், ஜிங்க் சல்பேட், வேளாண் உபகரணங்களின் தொகுப்பு, தார்ப்பாலின் வழங்கப்படுகிறது.டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, கூகுள் பே, போன் பே மூலம் தங்களின் பங்களிப்பு தொகையை (பணம்) விவசாயிகள் செலுத்தி, விதை, உரங்கள், உபகரணங்கள் பெறலாம். இவ்வாறு கூறினார்.