/உள்ளூர் செய்திகள்/சேலம்/மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுரைமகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை
மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு அறிவுரை
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
மகுடஞ்சாவடி : மகுடஞ்சாவடி வேளாண்மை உதவி இயக்குனர் தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:மானாவாரி நிலங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்திட, ஏக்கர் ஒன்றுக்கு உழவு மற்றும் விதை மானியமாக, 1,200 ரூபாய் வழங்கப்படுகிறது.
உயிர் பூச்சிக்கொல்லி பண்புடைய ஆடாதொடை, நொச்சி நடவுக்கன்றுகள் ஒரு கன்றுக்கு, 20 ரூபாய் மானியம் வீதம், 12,500 ரூபாய், வேம்பு மரக்கன்றுகள் நட, 2,100 கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. மண்புழு உர படுக்கைகள் அமைக்க, 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளன. எனவே, மகுடஞ்சாவடி வட்டார விவசாயிகள் பயன்பெற, தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.