60 கிராம் தங்கம், வெள்ளி் திருட்டு
60 கிராம் தங்கம், வெள்ளி் திருட்டு
60 கிராம் தங்கம், வெள்ளி் திருட்டு
ADDED : செப் 12, 2025 02:29 AM
சேலம், சேலம் பொன்னம்மாபேட்டை, வாசகசாலை 4 வது தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், 40. இவர் கடந்த, 4ல் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், மல்லுாரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று விட்டு கடந்த, 7ல் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த காளிதாஸ் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் துணிகள் கலைக்கப்பட்டு அதிலிருந்த, 18 கிராம் தங்க நகை, வெள்ளி அரைஞான் கயிறு, ரூ.5,000 திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
* கருப்பூர் சாமிநாயக்கன்பட்டியை சேந்தவர் ராஜேந்திரன் மனைவி கவிதா, 40. கடந்த, 6ல் வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலையாக, வெளியே சென்று விட்டு மறுநாள் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த, 42 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து கவிதா, நேற்று முன்தினம் கருப்பூர் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் சம்பவ இடத்தில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.