/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சாலை தடுப்பில் மோதி நின்ற கன்டெய்னர் லாரி சாலை தடுப்பில் மோதி நின்ற கன்டெய்னர் லாரி
சாலை தடுப்பில் மோதி நின்ற கன்டெய்னர் லாரி
சாலை தடுப்பில் மோதி நின்ற கன்டெய்னர் லாரி
சாலை தடுப்பில் மோதி நின்ற கன்டெய்னர் லாரி
ADDED : செப் 12, 2025 02:29 AM
தாரமங்கலம், கோவையில் இயங்கும் பார்சல் சர்வீஸ் கம்பெனியில், திருநெல்வேலியை சேர்ந்த இசக்கிராஜா, 28, டிரைவராக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், பெங்களூருவில் இருந்து, கன்டெய்னர் லாரியில் பார்சல்களை ஏற்றி கொண்டு கோவை நோக்கி சென்று கொண்டிருருந்தார்.
தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி பைபாஸ் பகுதியில், நேற்று அதிகாலை 3:30 மணிக்கு வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, அங்கிருந்த இரு மின்கம்பம், சாலை ஓரம் இருந்த இரும்பு தடுப்பை உடைத்து நின்றது. அதிகாலையில் விபத்து நடந்ததால், சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மின்கம்பம் உடைந்ததால், ஒரு மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.