/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீரோடை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம் நீரோடை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
நீரோடை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
நீரோடை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
நீரோடை ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
ADDED : செப் 12, 2025 02:28 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி சுவேத நதியிலிருந்து, நடுவலுார் ஏரிக்கு, 4 கி.மீ., தொலைவிற்கு நீர் வழி வாய்க்கால் உள்ளது.
கெங்கவல்லி நீர் வழி வாய்க்கால் பகுதியில், 43 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளன. மேலும் கழிவு நீர் கொட்டப்படுவதால், நடுவலுார் ஏரிக்கு நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் உதவியுடன் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய் துறையினர், ஆக்கிரமிப்பு செய்திருந்த ஐந்து வீடுகளை அகற்றினர். மற்ற வீடுகள் அப்புறப்படுத்த அவகாசம் கேட்டுள்ளனர்.