Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 18 தென்னை மரம் அழிப்பு 3 சகோதரர்களுக்கு 'காப்பு'

18 தென்னை மரம் அழிப்பு 3 சகோதரர்களுக்கு 'காப்பு'

18 தென்னை மரம் அழிப்பு 3 சகோதரர்களுக்கு 'காப்பு'

18 தென்னை மரம் அழிப்பு 3 சகோதரர்களுக்கு 'காப்பு'

ADDED : மே 26, 2025 05:28 AM


Google News
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், இடையப்பட்டி அருகே கத்திரிப்-பட்டியை சேர்ந்த, ஐ.டி., நிறுவன ஊழியர் சந்தோஷ், 41. இவ-ருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்னையில் முன்விரோதம் உள்ளது.

இந்நிலையில் சந்தோஷூக்கு சொந்தமான, கத்திரிப்பட்டியில் உள்ள தோப்பில், 18 தென்னை மரங்களின் குருத்துகள் காய்ந்தி-ருந்தன.

தொடர்ந்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்தும், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 மரங்களும் காய்ந்துவிட்டன.

பாண்டியன் அவரது, 3 மகன்கள் சேர்ந்து, சந்தோஷ் குடும்-பத்தை பழி வாங்க, தென்னை மரங்களுக்கு மருந்து வைத்து கொன்றது தெரியவர, சந்தோஷ், ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தார்.

விசாரித்த போலீசார், நேற்று பாண்டியன் மகன்களான கும-ரவேல், 32, பிரபாகரன், 29, கார்த்தி, 26, ஆகியோரை கைது செய்-தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us