/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய் அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்
அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்
அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்
அவுட்டுக்காயை கடித்ததில் வாய் சிதறி பலியான நாய்
ADDED : மே 26, 2025 05:27 AM
ஓமலுார்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா கணவாய்புதுாரில், லேண்டு காலனியை சேர்ந்த, விவசாயி சுந்தரம், 60. இவரது வளர்ப்பு நாய், அவரது தோட்டத்தில் வாய் சிதறிய நிலையில், நேற்று இறந்து கிடந்தது. இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனத்து-றையினர் விசாரித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
வனப்பகுதி ஒட்டி உள்ள தோட்டத்துக்கு, காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க, தோட்டத்தில் வைக்கப்பட்ட, 'அவுட்-டுக்காய்' எனும் நாட்டு வெடியை, நாய் கடித்து இறந்திருக்கலாம். இதனால் அதை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.