/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் 'கலகல' தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் 'கலகல'
தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் 'கலகல'
தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் 'கலகல'
தகனமேடை சோதனை ஓட்டத்துக்கு யார் உடலை வைப்பது?: கவுன்சிலர் கேள்வியால் 'கலகல'
ADDED : ஜூலை 21, 2024 10:39 AM
ஆத்துார்: நரசிங்கபுரம் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம் வருமாறு:அ.தி.மு.க., கவுன்சிலர் சரண்யா: ஒன்றரை ஆண்டுகளாக கொசு மருந்து அடிக்காததால், கொசுக்கடியில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தி.மு.க., கவுன்சிலர்கள் பிரகாஷ், கணபதி: இதற்கு அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும்.கமிஷனர் சையதுமுஸ்தபாகமால்: கொசு மருந்து இயந்திரம் பழுதானதாக, சுகாதார அலுவலர்கள் கூறினர். விரைவில் சரிசெய்து கொசு மருந்து அடிக்கப்படும்.தி.மு.க., கவுன்சிலர் செல்வக்குமார்: இறந்தவர்களுக்கு வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி, ஓராண்டாக வழங்கப்படாமல் உள்ளது.
சையதுமுஸ்தபாகமால்: நகராட்சி பொது நிதி போதிய அளவில் இல்லாததால் தொழில், சொத்து, குடிநீர் வரி வசூல் செய்ய வேண்டும். ஈமச்சடங்கு நிதி கேட்டு தபால் அனுப்பப்பட்டுள்ளது. வரி இனங்கள் வசூல் செய்தால் பொது நிதியில் இருந்து ஈமச்சடங்கு நிதி வழங்கப்படும்.
தி.மு.க., கவுன்சிலர் ஜோதி: நரசிங்கபுரத்தில், 1.40 கோடி ரூபாயில் எரிவாயு தகன மேடை பணி முடிந்த நிலையில் திறக்கப்படாமல் உள்ளது. சையதுமுஸ்தபாகமால்: சோதனை ஓட்டப்பணி மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணி முடிந்ததும் திறக்கப்படும். ஜோதி: சோதனை ஓட்டம் எனில் யார் உடலை வைத்து சோதிப்பது?(கவுன்சிலர்கள் அனைவரும் சிரித்தனர்).
சையதுமுஸ்தபாகமால்: போலீசாரிடம் தெரிவித்து அனாதை உடலை பெற்று வந்து, எவ்வளவு நேரம் எரியூட்டப்படுகிறது, இயந்திர செயல்பாடு உள்ளிட்ட சோதனை பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.
கமிஷனருக்கு காத்திருப்பு
கவுன்சிலர் கூட்டம் மாலை, 4:00 மணிக்கு நடக்கும் என அறிவித்திருந்த நிலையில், தலைவர் உள்பட, 18 கவுன்சிலர்கள் வந்தனர். ஆனால் கமிஷனர் (பொ) சையதுமுஸ்தபாகமால், மாலை, 5:00 மணியளவில் கூட்டத்திற்கு வந்தார். இதனால், ஒரு மணி நேரம் தலைவர், கவுன்சிலர்கள் காத்திருந்தனர்.