/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 9 டி.எம்.சி., உயர்வு மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 9 டி.எம்.சி., உயர்வு
மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 9 டி.எம்.சி., உயர்வு
மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 9 டி.எம்.சி., உயர்வு
மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 9 டி.எம்.சி., உயர்வு
மண் அள்ளும் பணி நிறுத்தம்
மேட்டூர் அணையின் மூலக்காடு, தின்னப்பட்டி, பண்ணவாடி, செட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில், 4 நாட்களாக வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச்சென்றனர். கபினி அணையில் திறக்கப்பட்ட உபரி நீர் வந்தததால் வறண்ட நீர்பரப்பு மூழ்கத்தொடங்கியது. இதனால் மண் அள்ள நேற்று முதல், தடை விதிக்கப்பட்டது. இதை அறியாமல் டிராக்டர்களுடன் வந்த விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கலெக்டர் ஆய்வு
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மேட்டூர் அணை, 16 கண் மதகு பகுதியில் நேற்று ஆய்வு செய்து, பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். அங்கு கவர்னர் பார்வையாளர் மாடத்தில் உள்ள, நீர்வழித்தடம் குறித்த வரைபடத்தை பார்வையிட்டார். அவரது சந்தேகங்களுக்கு உதவி பொறியாளர் செல்வராஜ் விளக்கம் அளித்தார். கொளத்துாரை அடுத்த செட்டிப்பட்டி பரிசல்துறைக்கு சென்று தண்ணீர் வரத்தை பார்வையிட்டார்.
சிவசமுத்திராவில் வெள்ளம்
கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி., கபினி நிரம்பும் தருவாயில், கடந்த, 4 முதல் காவிரியில் நீர்திறக்கப்பட்டது. 18ல் அதிகபட்சமாக வினாடிக்கு, 70,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது.