/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'செம்மை' நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றுங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை 'செம்மை' நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றுங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
'செம்மை' நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றுங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
'செம்மை' நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றுங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
'செம்மை' நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பின்பற்றுங்க! வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை
ADDED : ஜூலை 21, 2024 09:43 AM
பனமரத்துப்பட்டி, : குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளும் விவசா-யிகள், செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்-பத்தை கடைப்பிடித்து, 40 சதவீத நீரை மிச்சப்ப-டுத்தி கூடுதல் மகசூல் பெறலாம்.
சேலம் மாவட்டத்தில் ஆடி பட்டத்தில் நெல் நடவு செய்யும் ஆயத்த பணிகளில், விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கூடுதல் மகசூல் பெறும் தொழில்நுட்பம் குறித்து, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:
செம்மை நெல் சாகுபடிக்கு தரமான சான்று பெற்ற, உயர் விளைச்சல் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களையே பயன்படுத்த வேண்டும். ஒரு ஏக்கர் நடவு செய்ய, 2 கிலோ விதைகள் போதும். ஒரு ஏக்கர் நடவுக்கு, 1 சென்ட் அளவில் நாற்றங்கால் அமைத்தால் போதுமானது. மேட்டுப் பாத்திகள் அமைத்து பாலிதீன் தாள்களை பரப்பி, இடையில் மரச்சட்டங்கள் வைக்க வேண்டும். அதில் மண், தொழு உரம் கலந்த கலவையை நிரப்பிய பின் விதைக்க வேண்டும்.நெல் நடவு வயல் துல்லியமாக சமன் செய்யப்பட வேண்டும். 10 முதல், 14 நாட்கள் வயதுடைய இளநாற்றுகளை, 22.5க்கு, 22.5 செ.மீ., இடைவெ-ளியில், சதுர முறையில் நடவு செய்ய வேண்டும். குத்து ஒன்றுக்கு ஒரு நாற்று மட்டும் நடவு செய்ய வேண்டும்.காய்ச்சலும், பாய்ச்சலும் முறையில் நீர் பாசனம் செய்ய வேண்டும். 2.5 செ.மீ., உயரத்துக்கு மேல் நீர் நிறுத்தல் கூடாது. உருளும் களைக்கருவி-யைக்கொண்டு, நடவு செய்த, 10 நாள் முதல், 10 நாட்களுக்கு ஒருமுறை என, 4 முறை, குறுக்கும் நெடுக்குமாக களையெடுக்க வேண்டும்.பச்சை இலைவண்ண அட்டையைப் பயன்படுத்தி தேவையான தழைச்சத்தை மேலுரமாக இடுதல் வேண்டும். செம்மை நெல் சாகுபடிக்கு குறைந்த விதை அளவு போதும். நாற்றங்கால் பராமரிப்பு செலவு குறைகிறது.இளம் நாற்று நடுவதால் விரைவான பயிர் வளர்ச்சி, அதிக வேர் வளர்ச்சி, அதிக துார்கள் கிடைப்பதால் பயிர்களின் சாயாத தன்மை அதிக-ரிக்கிறது. மண்ணின் மேற்பரப்பில் உருளும் களைக்கருவி மூலம் களை எடுப்பதால் மண்ணின் காற்றோட்ட வசதி அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்-பாடு அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது. 30 முதல், 40 சதவீத நீர் சேமிக்கப்படுகிறது. பூச்சி நோய் தாக்குதல், எலி தாக்குதல் குறைகிறது.முதிரும் பருவம் வரை பயிர் பசுமையாக இருப்-பதால், பதர் இல்லாத நன்கு முற்றிய நெல் மணிகள் கிடைக்கின்றன. இதனால் கூடுதல் தானிய மகசூல், அதிக வைக்கோல் மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறலாம்.நெல் விதைகள், விதை நேர்த்தி செய்ய உயிர் உரங்கள், நெல் நுண்ணுாட்டம், ஜிங்க் சல்பேட், துத்தநாக சல்பேட் ஆகிய இடுபொருட்கள், பனம-ரத்துப்பட்டி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகள் பெற்று பயன்பெ-றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.