/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சூரியனை சுற்றி ஒளிவட்டம்: ஆச்சரியமாக பார்த்த மக்கள் சூரியனை சுற்றி ஒளிவட்டம்: ஆச்சரியமாக பார்த்த மக்கள்
சூரியனை சுற்றி ஒளிவட்டம்: ஆச்சரியமாக பார்த்த மக்கள்
சூரியனை சுற்றி ஒளிவட்டம்: ஆச்சரியமாக பார்த்த மக்கள்
சூரியனை சுற்றி ஒளிவட்டம்: ஆச்சரியமாக பார்த்த மக்கள்
ADDED : ஜூலை 21, 2024 10:44 AM
வீரபாண்டி: சேலத்தில் நேற்று பகலில், சூரியனை சுற்றி கருமையாக, 'ஒளிவட்டம்' காணப்பட்டது. இதை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். தொடர்ந்து மொபைல் போன்களில் படம் எடுத்த சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இதை பார்த்த முதியோர், 'அகல் வட்டம்' என்றனர். இப்படி தெரிந்தால், இரவில் மழை வர வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். இதுகுறித்து வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: வளி மண்டல மேற்பரப்பில் மழை மேகங்கள் மிக உயரமாக கடக்கும்போது பட்டக வடிவில் பனிக்கட்டி துகள்களாக மாறும்.
அதன் மீது சூரிய ஒளி பட்டு பிரதிபலித்து ஒளி விலகல் ஏற்படும். இது, 22 டிகிரி வரை விலகல் நடக்கும்போது சூரியனை சுற்றி இதுபோன்ற ஒளிவட்டம் ஏற்படுவது இயல்பு. இதனால் பாதிப்பு ஏதும் கிடையாது. ஆனால் மழை வருவதற்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முத்துமலை முருகன்
ஏத்தாப்பூரில் உள்ள முத்துமலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில் சுவாமி சிலை உள்ளது. அதன் தலை பகுதி மீது நேற்று மதியம், 2:00 மணிக்கு சூரிய ஒளிவட்டம் தென்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள், முருகன், சூரிய பகவானை வழிபட்டனர்.