/உள்ளூர் செய்திகள்/சேலம்/தலைமை ஆசிரியராக 16 பேருக்கு பதவி உயர்வுதலைமை ஆசிரியராக 16 பேருக்கு பதவி உயர்வு
தலைமை ஆசிரியராக 16 பேருக்கு பதவி உயர்வு
தலைமை ஆசிரியராக 16 பேருக்கு பதவி உயர்வு
தலைமை ஆசிரியராக 16 பேருக்கு பதவி உயர்வு
ADDED : ஜூலை 21, 2024 10:44 AM
சேலம்: தமிழகத்தில் காலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு, ஆன்லைன் மூலம் நேற்று நடந்தது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து, 19 முதுகலை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அவர்களில், விருப்பத்தின் அடிப்படையில், 16 பேர் பதவி உயர்வு பெற்று தலைமை ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்தனர். இவர்களுக்கு பதவி உயர்வு ஆணையை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் வழங்கினார். விரும்பிய இடம் கிடைக்காததால், 3 பேர் பதவி உயர்வை ஏற்கவில்லை.