/உள்ளூர் செய்திகள்/சேலம்/விமான போலி டிக்கெட் விவகாரம் தரகரும் ஏமாற்றப்பட்டதால் விடுவிப்புவிமான போலி டிக்கெட் விவகாரம் தரகரும் ஏமாற்றப்பட்டதால் விடுவிப்பு
விமான போலி டிக்கெட் விவகாரம் தரகரும் ஏமாற்றப்பட்டதால் விடுவிப்பு
விமான போலி டிக்கெட் விவகாரம் தரகரும் ஏமாற்றப்பட்டதால் விடுவிப்பு
விமான போலி டிக்கெட் விவகாரம் தரகரும் ஏமாற்றப்பட்டதால் விடுவிப்பு
ADDED : ஜூலை 21, 2024 10:45 AM
சேலம்: அயோத்தி, காசி உள்பட பல்வேறு இடங்களுக்கு விமானம் மூலம் ஆன்மிக சுற்றுலா அழைத்துச்செல்வதாக, ஆந்திரா மாநிலம் திருப்பதியை சேர்ந்த சபாநாதன், 45, அறிவித்தார். இப்பணியில் தரகர்கள் ஈடுபட்டனர். 106 பேர் பணம் செலுத்தினர். அவர்களுக்கு விமான டிக்கெட் அனுப்பப்பட்டது. அனைவரும் மதுரை சென்றபோது, அது போலி டிக்கெட் என தெரிந்தது. இதில் சேலத்தை சேர்ந்த, 10 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.
அவர்கள் புகார்படி, தனிப்படை போலீசார் விசாரணையில், 106 பேரிடம், 13 லட்சம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்தது. அதில் சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த ராஜா, 60, தரகராக செயல்பட்டு சேலத்தை சேர்ந்தவர்களை சேர்த்துவிட்டது தெரிந்தது. இதனால் சபாநாதன், ராஜாவை, நேற்று முன்தினம் பிடித்து இரும்பாலை போலீசார் விசாரித்தனர். அதில் சபாநாதனை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ராஜா, டிராவல்ஸ் நிறுவனங்கள் மூலம் சுற்றுலா தலங்களுக்கு பயணியரை அழைத்துச்செல்கிறார். அவருக்கு சபாநாதன் அறிமுகமானார். அவர், விமான நிலைய அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளதால், டிக்கெட் எடுத்து தருவதாக கூறினார். அதை நம்பிய ராஜா, அயோத்தி சென்று வர, 12,000 ரூபாய் என அறிவித்தார். அதை நம்பி பலர் பணம் கட்டினர். சபாநாதன், போலி டிக்கெட் வழங்கி ராஜாவையும் ஏமாற்றியது விசாரணையில் தெரிந்தது. இதனால் ராஜாவை விடுவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.