/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மின் கட்டண உயர்வை கண்டித்து 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்து 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து 23ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 21, 2024 10:46 AM
ஆத்துார்: மின் கட்டண உயர்வை கண்டித்து வரும், 23ல் ஆத்துாரில், அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை: லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு பரிசாக, முன் தேதியிட்டு மின் கட்டணத்தை உயர்த்தி, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. இரு ஆண்டுகளில், 3வது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் ஏப்ரல் முதல், ரேஷன் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை. இவற்றை கண்டித்து, சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், ஆத்துார், ராணிப்பேட்டையில், வரும், 23 காலை, 10:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் இன்னாள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.