/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏர்கன் மூலம் குருவி சுட்ட இருவர் கைது ஏர்கன் மூலம் குருவி சுட்ட இருவர் கைது
ஏர்கன் மூலம் குருவி சுட்ட இருவர் கைது
ஏர்கன் மூலம் குருவி சுட்ட இருவர் கைது
ஏர்கன் மூலம் குருவி சுட்ட இருவர் கைது
ADDED : ஜூலை 30, 2024 02:47 AM
மேட்டூர்: ஏர்கன் மூலம் குருவிகளை சுட்ட, இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி தாமோதரன், 26. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு தொழிலாளி பொன்னரசன், 26. இருவரும் உறவினர்கள். இவர்கள் நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு காவேரிகிராஸ் கால்வாய் அருகே ஏர்கன் மூலம் குருவிகளை சுட்டுள்ளனர். மேட்டூர் வனவர் சிவகுமார், வனகாப்பாளர் விமல்ராஜ் இருவரும் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருவரையும் கைது செய்து, அவர்-களிடம் இருந்த ஏர்கன், பால்ரஸ் குண்டுகளை பறிமுதல் செய்-தனர். நேற்று இருவரையும் மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்-1ல் ஆஜர்படுத்தினர். அவர்களை, 12 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் பத்மப்ரியா உத்தரவு பிறப்பித்தார்.