/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது
ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது
ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது
ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது
ADDED : ஜூலை 30, 2024 02:47 AM
சேலம்: தாசில்தார் வீட்டில் ஏசியை கழற்ற முயன்ற, இருவர் கைது செய்-யப்பட்டனர்.சேலம், திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்தவர் தயாளன். ஓய்வு பெற்ற துணை தாசில்தார். நேற்று முன்தினம் தயாளன், மகன் கவுதம் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்-போது, மதியம், 3:00 மணியளவில் வீட்டின் மொட்டை மாடி வழியாக வந்த இருவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி மிஷினை கழற்ற முயன்றனர். இதை பார்த்த கவுதம், அங்கிருந்த-வர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து சூரமங்கலம் போலீ-சாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சட்-டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திப்குமார் நிதின், 23, ஷ்யாம்லால், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.