/உள்ளூர் செய்திகள்/சேலம்/ டயர் ரீட்ரெட்டிங் விலை உயர்கிறது ஆதரவு தர சங்கம் வலியுறுத்தல் டயர் ரீட்ரெட்டிங் விலை உயர்கிறது ஆதரவு தர சங்கம் வலியுறுத்தல்
டயர் ரீட்ரெட்டிங் விலை உயர்கிறது ஆதரவு தர சங்கம் வலியுறுத்தல்
டயர் ரீட்ரெட்டிங் விலை உயர்கிறது ஆதரவு தர சங்கம் வலியுறுத்தல்
டயர் ரீட்ரெட்டிங் விலை உயர்கிறது ஆதரவு தர சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 30, 2024 02:47 AM
ஆத்துார்: ரப்பர் விலை உயர்வு, சீனா டயர் வரத்து காரணமாக, டயர் ரீட்-ரெட்டிங் விலை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன உரி-மையாளர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என, டயர் ரீட்ரெட்டிங் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர் சங்க மாநில தலைவர் ராஜ்குமார், சேலம் மாவட்ட தலைவர் கமலஹாசன் ஆகியோர் நேற்று, வெளியிட்டுள்ள அறிக்கை: கன-ரக வாகன மோட்டார் துறையில், மத்திய அரசால் அதிக எடை ஏற்ற அனுமதி வழங்கியதால், டயர் ரீட்ரெட்டிங்கிற்கான எண்-ணிக்கை குறைந்துள்ளது. தவிர, சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து, தரமற்ற முறையில் புதிய டயர்கள் வருகிறது. தற்போது, டயர் ரீட்ரெட்டிங் தொழில் நலிவடைந்து வருவதால், பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.மேலும் மின் கட்டண உயர்வு, ஜி.எஸ்.டி., பிரச்னை இவற்றுக்கு இடையே மூலப் பொருட்கள், ரப்பர் விலையும் வரலாறு காணாத வகையில், 17 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. ரப்பர் விலை உயர்வு காரணமாக, டயர் ரீட்ரெட்டிங் விலை ஒரு செட் டய-ருக்கு, 1,000 முதல், 1,500 ரூபாய் வரை விலை உயரும் நிலை உள்ளது. தவிர்க்க முடியாத விலை உயர்வுக்கு, வாகன உரிமையா-ளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.