/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி
அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி
அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி
அடிப்படை பிரச்னைக்கு முன்னுரிமை மாநகராட்சி புது கமிஷனர் உறுதி
ADDED : ஜூலை 26, 2024 02:13 AM
சேலம்: சேலம் மாநகராட்சி கமிஷனராக இருந்த பாலச்சந்தர், தாம்பரத்-துக்கு மாற்றப்பட்டார். இதனால் சேலம் மாநகராட்சி புது கமிஷ-னராக ரஞ்ஜீத் சிங் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். உத்தரபிர-தேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், 2016ல் ஐ.ஏ.எஸ்., தேர்வாகி, குன்னுாரில் உதவி கலெக்டராக பணியில் சேர்ந்தார். நாகப்பட்டினம் கூடுதல் கலெக்டராக பணிபுரிந்த நிலையில், சேலம் மாநகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.
இவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து தீர்க்க நட-வடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக அடிப்படை வசதிகளான, 24 மணி நேர குடிநீர் வினியோகம், குப்பை அகற்றுதல், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்-படும். மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்-டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட பணி இன்னும் முடியாமல் உள்ளது. அதுவரை எங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க தற்கா-லிக நடவடிக்கை எடுக்கப்படும். தெருநாய்களை கட்டுப்படுத்-தவும், வரி வசூல் தொய்வின்றி நடக்கவும், நடவடிக்கை மேற்-கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.