பா.ம.க., நிறுவனர் பிறந்தநாள் விழா
பா.ம.க., நிறுவனர் பிறந்தநாள் விழா
பா.ம.க., நிறுவனர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூலை 26, 2024 02:14 AM
மேட்டூர்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸின், 86வது பிறந்தநாள் விழா, சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், மேட்டூர் ஸ்டேட் வங்கி அருகே நேற்று கொண்டாடப்பட்டது. அதில், 86 கிலோ கேக் வெட்டி, 1,000 மரக்கன்றுகள் வழங்கி அன்னதானம் செய்யப்பட்-டது. இதில் மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், மேற்கு மாவட்ட செயலர் ராஜசேகரன், மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், மாரப்பன் உள்பட பலர் பங்கேற்-றனர். ஓமலுாரில், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் கட்சியினர் கொண்டாடினர். வன்னியர் சங்க மாநில அமைப்பு செயலர் கார்த்தி, கேக் வெட்டி அனைவருக்கும் வழங்-கினார். தாரமங்கலத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தலை-மையில், அங்குள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. அயோத்தியாப்பட்டணம் கோதாண்டராமர் கோவிலில், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து சேலம் வடக்கு மாவட்ட செயலர் நாராயணன் தலை-மையில் கட்சியினர், ஏழை, எளியோருக்கு உணவு வழங்கினர்.
இடைப்பாடியில் முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி தலைமையில் கட்சியினர், மக்களுக்கு இனிப்பு வழங்கினர். சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். சங்க-கிரி உள்பட மாவட்டம் முழுதும், ராமதாஸ் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது