/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பொது மாறுதலுக்கு அனுமதி பல்கலை ஆசிரியர் கோரிக்கை பொது மாறுதலுக்கு அனுமதி பல்கலை ஆசிரியர் கோரிக்கை
பொது மாறுதலுக்கு அனுமதி பல்கலை ஆசிரியர் கோரிக்கை
பொது மாறுதலுக்கு அனுமதி பல்கலை ஆசிரியர் கோரிக்கை
பொது மாறுதலுக்கு அனுமதி பல்கலை ஆசிரியர் கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2024 08:40 AM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பிய மனு: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் முறையை மீண்டும் அமல்படுத்துவது அவசியம்.
பல்கலை ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை, மத்திய பல்கலையில் உள்ளது போன்று, 65 ஆக உயர்த்த வேண்டும். பல்கலை ஆசிரியர்கள், அனைத்து பல்கலையில் பணியாற்றும்படி பொதுமாறுதலுக்குஅனுமதி வழங்க வேண்டும். பெரியார் பல்கலை சாசன விதியில் உள்ளபடி சுழற்சி முறையில் துறைத்தலைவர் பதவியை வழங்க உத்தரவிடவேண்டும்.