/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆவணம் இல்லாததால் 10 டிராக்டருக்கு அபராதம்ஆவணம் இல்லாததால் 10 டிராக்டருக்கு அபராதம்
ஆவணம் இல்லாததால் 10 டிராக்டருக்கு அபராதம்
ஆவணம் இல்லாததால் 10 டிராக்டருக்கு அபராதம்
ஆவணம் இல்லாததால் 10 டிராக்டருக்கு அபராதம்
ADDED : ஜூலை 20, 2024 08:39 AM
மேட்டூர்: மேட்டூர் அணை மூலக்காட்டில், வறண்ட நீர்பரப்பு பகுதியில் கடந்த, 15 முதல், விவசாயிகள், டிராக்டர் மூலம் மண் எடுத்துச்செல்கின்றனர். அங்கு நேற்று, மேட்டூர் வட்டார போக்குவரத்து கழக ஆய்வாளர் மீனாகுமாரி, மண் எடுக்க வந்த டிராக்டர்களை நிறுத்தி டிரைவர்களிடம் விசாரித்தார். அப்போது, 10 டிராக்டர்களில் காப்பீடு உள்ளிட்ட முறையான ஆவணங்கள் இல்லாதது தெரிந்தது. இதனால் அந்த வாகனங்களுக்கு தலா, 5,000 வீதம், 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.
வாகனங்கள் பறிமுதல்
மேட்டூர் அணை கோட்டையூர் நீரப்பரப்பு பகுதியில், சப் - கலெக்டர் பொன்மணி நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியே, டிப்பர் லாரியில், விதிமீறி மண் ஏற்றி சென்றது தெரிந்தது. அந்த லாரியை பறிமுதல் செய்தார். தொடர்ந்து சின்னமேட்டூர், சென்றாய பெருமாள் கோவில் அருகே உள்ள செங்கல் சூளையில் கூடுதல் மண் லோடுடன் நின்ற டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.