'ரூ.41 கோடியில் ஏரி சீரமைக்கப்படும்'
'ரூ.41 கோடியில் ஏரி சீரமைக்கப்படும்'
'ரூ.41 கோடியில் ஏரி சீரமைக்கப்படும்'
ADDED : ஜூலை 20, 2024 08:40 AM
சேலம்: சேலம், நகரமலை அடிவாரத்தில் உள்ள இஸ்மாயில்கான் ஏரி, 26.5 ஏக்கர் கொண்டது.
அந்த ஏரியை நேற்று, பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஏரியை அழகுப்படுத்த, 3 முறை சட்டசபையில் பேசினேன். 'உங்கள் தொகுதி' திட்டத்தில், முதல் கோரிக்கையாக பூங்கா அமைக்க கேட்டிருந்தேன். இந்நிலையில், சீர்மிகு நகர திட்டத்தில், 41.5 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரித்த சேலம் மாநகராட்சி, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளது. இதற்கான பணி விரைவில் தொடங்கும்,'' என்றார்.