டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு
டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு
டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் திறப்பு
ADDED : ஜூலை 12, 2024 01:00 AM
சேலம், சேலம், அழகாபுரத்தில், 4 திரைகள் அடங்கிய, டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர் நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தலைமை வகித்தார். ஸ்ரீவிஜய் வித்யாலயா கல்வி நிறுவன தலைவர் மணிவண்ணன், இயக்குனர்கள் மீனா, பிரேம், சினேகா பிரவீன், வேலு பிரசாத் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, அதிநவீன திரையரங்கை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதுகுறித்து டி.என்.சி., நிர்வாகிகள் கூறியதாவது:
தர்மபுரியில், டி.என்.சி., நிறுவனம் சார்பில், 'டிமேக்ஸ்' எனும், 5 திரைகள் அடங்கிய நவீன மல்டிபிளக்ஸ் தியேட்டர் உள்ளது. இந்நிறுவனம் சார்பில், சேலம், அழகாபுரத்தில், 'ரத்னா ஸ்கொயர்' வணிக வளாகத்தில், டி.என்.சி.ராக்ஸ் தியேட்டர்ஸ் பெயரில், 4 திரைகள் அடங்கிய
மல்டிபிளக்ஸ் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் தியேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
திறப்பு விழாவில், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தர்மபுரி நகராட்சி தலைவி லட்சுமி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் அருள், சதாசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
---