/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு கல்லுாரியில் உலக மக்கள் தொகை தின விழா அரசு கல்லுாரியில் உலக மக்கள் தொகை தின விழா
அரசு கல்லுாரியில் உலக மக்கள் தொகை தின விழா
அரசு கல்லுாரியில் உலக மக்கள் தொகை தின விழா
அரசு கல்லுாரியில் உலக மக்கள் தொகை தின விழா
ADDED : ஜூலை 12, 2024 01:00 AM
நாமக்கல்,நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலை கல்லுாரியில், யூத் ரெட் கிராஸ் சார்பில், உலக மக்கள் தொகை தின சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, 11ம் தேதி உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் கல்லுாரியில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு, முதல்வர் ராஜா தலைமை வகித்தார். அதில், கல்லுாரி வாயில் முன் மனித சங்கிலி அமைத்து பொது மக்களுக்கு பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த அறிவுறுத்தி துணிப்பை, செடிகள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
புவியியல் துறை மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், துறை தலைவர் தங்கவேலு, குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சேகர், சாலை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் வெஸ்லி செய்திருந்தார்.