Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கோவையில் பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவையில் பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவையில் பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவையில் பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ADDED : ஜூலை 11, 2024 10:58 PM


Google News
சேலம்:கோவை, பீளமேடு அருகே பொறியியல் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் ஜூலை, 14, 15, 17ல் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், திப்ருகர் - கன்னியாகுமி எக்ஸ்பிரஸ், டில்லி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி, ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி ஆகியவை, ஜூலை, 14, 15, 17 ஆகிய நாட்களிலும், பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், சில்ஷார் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஜூலை, 14லும், இருகூர், போத்தனுார் வழியே இயக்கப்படும். கோவை ஜங்ஷன் செல்லாது.

ஈரோடு - கோவை ரயில், ஜூலை, 14, 15, 17ல், இருகூர் வரை மட்டும் இயக்கப்படும். இருகூர் முதல் கோவை வரை சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை - சோரனுார் ரயில், ஜூலை, 14, 15, 17ல் போத்தனுாரில் இருந்து புறப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us