/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மேட்டூர் அணை நீர் இருப்பு 1 டி.எம்.சி., அதிகரிப்பு மேட்டூர் அணை நீர் இருப்பு 1 டி.எம்.சி., அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர் இருப்பு 1 டி.எம்.சி., அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர் இருப்பு 1 டி.எம்.சி., அதிகரிப்பு
மேட்டூர் அணை நீர் இருப்பு 1 டி.எம்.சி., அதிகரிப்பு
ADDED : ஜூலை 11, 2024 10:58 PM
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நீர் இருப்பு, 93.47 டி.எம்.சி., காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து வந்தது. ஆனால் நேற்று முன்தினம், 4,521 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து, நேற்று, 4,197 கன அடியாக சற்று குறைந்தது.
அணையில் இருந்து குடிநீருக்கு, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. திறப்பை விட வரத்து கூடுதலாக உள்ளதால், கடந்த, 3ல், 39.65 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 41.65 அடியாகவும், 11.91 டி.எம்.சி.,யாக இருந்த நீர் இருப்பு நேற்று, 12.95 டி.எம்.சி.,யாகவும் அதிகரித்தது.