/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு 11 பேரை காவலில் எடுக்க திட்டம் அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு 11 பேரை காவலில் எடுக்க திட்டம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு 11 பேரை காவலில் எடுக்க திட்டம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு 11 பேரை காவலில் எடுக்க திட்டம்
அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கு 11 பேரை காவலில் எடுக்க திட்டம்
ADDED : ஜூலை 11, 2024 10:40 PM
சேலம்,:அ.தி.மு.க., பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சேலம், தாதகாப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்தவர் சண்முகம், 60. அ.தி.மு.க.,வில், கொண்டலாம்பட்டி பகுதி செயலராக இருந்தார். இவரை, கடந்த, 3ல் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார், தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட, 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன், கவுன்சிலர் தனலட்சுமி உள்பட, 3 பேரை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
சம்பவத்தன்று சதீஷ்குமார், ரவுடி அருண்குமார், பூபதி, சந்தோஷ் ஆகியோர், 4 பகுதிகளில் நின்று கொண்டு, சண்முகம் எந்த வழியில் வந்தாலும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர். அதன்படி, அருண்குமார் நின்றிருந்த வழியில் சண்முகம் வந்தார். உடனே அருண்குமார் தலைமையிலான கும்பல், சண்முகத்தை வெட்டி கொலை செய்தது. இதுகுறித்து வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். கொலையில் வேறு யாருக்கு தொடர்புள்ளதா என விசாரிக்க, சிறையில் உள்ள, 11 பேரையும் விரைவில் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.