/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' இன்று கருத்து தெரிவிக்கலாம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' இன்று கருத்து தெரிவிக்கலாம்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' இன்று கருத்து தெரிவிக்கலாம்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' இன்று கருத்து தெரிவிக்கலாம்
ஆக்கிரமிப்பாளர்களுக்கு 'நோட்டீஸ்' இன்று கருத்து தெரிவிக்கலாம்
ADDED : ஜூன் 28, 2024 02:10 AM
மேட்டூர், மேட்டூர் நகராட்சி மேற்கு பிரதான சாலை, மின்வாரிய பணிமனை முனையில் தொடங்கி மாதையன்குட்டையில் முடிகிறது. இச்சாலை இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. ஆனால் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்பை அகற்ற, 2021ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் நகராட்சி நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து நகராட்சி சார்பில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் கணக்கெடுப்பட்டன. இதில், 211 கடைகளின் முகப்பு பகுதி, சாலையை ஆக்கிரமித்து கட்டியது தெரிந்தது. 3 மாதத்துக்கு முன் ஆக்கிரமிப்பு பகுதியை, நகராட்சி அலுவலர்கள் அளவீடு செய்தனர். அதில், 10 அடி முதல், 30 அடி வரை, ஆக்கிரமிப்பு செய்திருந்தது
தெரிந்தது.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து கடை உரிமையாளர்களின் கருத்துகளை எழுத்து மூலமும், உரிய ஆவணங்களுடனும், இன்று மதியம், 3:00 மணிக்குள் சமர்ப்பிக்க, நகராட்சி அலுவலர்கள் சார்பில் நேற்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.