ADDED : ஜூன் 28, 2024 02:10 AM
தலைவாசல், தலைவாசல் ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள, கெங்கவல்லி எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில் பொது நுாலகத்துறை சார்பில் புத்தக கண்காட்சி, விற்பனை தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
புத்தக கண்காட்சியை, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி தொடங்கி வைத்தார். வரும், 30 வரை, காலை, 9:30 முதல், இரவு, 8:00 மணி வரை, புத்தக கண்காட்சி, விற்பனை நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் சங்கரய்யா, மாநில செயலர் கோவிந்தன் உள்பட பலர்
பங்கேற்றனர்.