/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி
மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி
மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி
மரத்தில் மின்சாரம் பாய்ந்து மேக்னசைட் ஊழியர் பலி
ADDED : ஜூலை 30, 2024 02:46 AM
ஓமலுார்: கோவில் பண்டிகைக்காக, மூங்கில் மரம் வெட்டி கொண்டு வந்-தவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.ஓமலுார் அருகே சேவிக்காடு பகுதியை சேர்ந்தவர் அண்ணா-மலை, 59. தமிழ்நாடு மேக்னசைட் கம்பெனி லேப் டெக்னீ-சியன். மனைவி காளியம்மாள், 55. திருமணமான இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அண்ணாமலை நேற்று காலை, 9:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள பூமாரியம்மன் கோவில் பண்-டிகைக்காக, தோரணம் கட்டுவதற்கு காமலாபுரம் பெரிய ஏரியில், மூங்கில் மரம் வெட்டி வந்துள்ளார். அப்போது பச்சைமூங்கில் மரம், மின்சார கம்பியில் பட்டதால், அண்ணாமலை துாக்கி வீசப்-பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகன் விஸ்வ-நாதன், 35, அளித்த புகார்படி, ஓமலுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.