/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆயுஷ் மருத்துவமனை விபரம் இணையத்தில் பதிய உத்தரவு ஆயுஷ் மருத்துவமனை விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
ஆயுஷ் மருத்துவமனை விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
ஆயுஷ் மருத்துவமனை விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
ஆயுஷ் மருத்துவமனை விபரம் இணையத்தில் பதிய உத்தரவு
ADDED : ஜூலை 30, 2024 02:46 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் இயங்கும் ஆயுஷ் தொடர்பான மருத்துவம-னைகள், சிகிச்சையகம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் சேவைகளை பயன்படுத்தும் வகையில், வெளிநாட்டினருக்கு விசா செயல்முறையை எளிதாக்குவதற்கு மருத்துவம் மற்றும் ஆயுஷ் விசா இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே ஆயுஷ் மருத்துவமனை, சிகிச்சையகம், ஆரோக்கிய மையங்களை நடத்தும் அனைத்து தொழில் முனைவோரும் இரு வாரங்களுக்குள், https://:indianfrro.gov.in/frro/medicalvaluetravel என்ற இணையதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டு கொள்ளப்ப-டுகிறது.இத் தகவலை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.