ADDED : ஜூன் 14, 2024 01:18 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் வரும், 18 முதல், 26 வரை ஜமாபந்தி நடக்க உள்ளது.
இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, வாரிசு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், ரேஷன் கார்டு, ஜாதி, வருமானம், முதல் பட்டதாரி, இருப்பிடம், ஆதரவற்ற விதவை ஆகிய சான்றிதழ்கள் பெற விண்ணப்பிக்கலாம். கணினி சிட்டா பெயர் திருத்தம், மின்சார இணைப்பு, முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை உதவித்தொகைகள், நில அளவை, குடிநீர், பொது சுகாதாரம், தெரு விளக்கு, சாலை வசதி, பசுமை வீடு, சிறு குறு விவசாயி சான்றிதழ், இதர மனுக்களையும் விண்ணப்பித்து பயன்பெற வழி செய்யப்பட்டுள்ளது என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.