/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நீக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம் நீக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம்
நீக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம்
நீக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம்
நீக்கப்பட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு போராட்டம்
ADDED : ஜூன் 14, 2024 01:18 AM
ஓமலுார் தனியார் நிறுவனத்தில் பணி நீக்கப்பட்ட தொழிலாளர்கள், மீண்டும் வேலை கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலுார் அருகே செல்லப்பிள்ளைகுட்டையில் வெள்ளக்கல்லை பவுடர் செய்து அதன் மூலம் தங்க நகை உருக்க பயன்படும் குப்பிகள் தயார் செய்யும் நிறுவனம் உள்ளது. அங்கு, 150க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இதை எதிர்த்து, நிர்வாகம் முதல்கட்டமாக, 8 ஆண்டாக பணியில் இருந்த, 31 பேரை, பணியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கியது.
இதை கண்டித்து, சி.ஐ.டி.யு., சேலம் மாவட்ட செயலர் கோவிந்தன் தலைமையில் நேற்று, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், அந்த நிறுவன நுழைவாயில் முன் அமர்ந்து, மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 5:00 மணிக்கு பின் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சங்க நிர்வாகி ஜெயமணி கூறுகையில், ''இதுதொடர்பாக சேலம் தொழிலாளர் நல அலுவலகத்தில் நாளை(இன்று) பேச்சு நடக்க உள்ளது. அதில் சமரசம் ஏற்படாவிட்டால், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடு
வோம்,'' என்றார்.