ADDED : ஜூன் 09, 2024 04:10 AM
ஆத்துார்: ஆத்துார் நகராட்சியில், துாய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒட்டு மொத்த துப்புரவு பணி நடந்து வருகிறது.
'எனது குப்பை எனது பொறுப்பு' என்ற அடிப்படையில், மக்கள் இயக்கம் துவங்கி பணிகள் நடந்து வருகிறது. நேற்று, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், துப்புரவு அலுவலர் பழனிசாமி தலைமையிலான துாய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவு அலுவலர், பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டு துாய்மை பணிகளில் ஈடுபட்டனர்.